தற்போதைய செய்திகள்

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கட்சிப் பதவி பறிப்பு

முதல்வர் எடப்பாடி பழனிசாமியை கட்சி பதவியில் இருந்து நீக்குவதாக டி.டி.வி தினரன் அறிவித்துள்ளார்.

DIN

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமியை கட்சி பதவியில் இருந்து நீக்குவதாக டி.டி.வி தினரன் அறிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் பதவியில் உள்ளார். அவரை அப்பதவியில் இருந்து நீக்கிவிட்டு அவருக்குப் பதிலாக முன்னாள் எம்.எல்.ஏ எஸ்.கே. செல்வம் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த அறிவிப்பை கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலாவின் ஒப்புதலுடன் வெளியிடுகிறேன் என்று துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் அறிவித்துள்ளார்.

அறுவை சிகிச்சை தொடங்கி விட்டது என்று கூறிய தினகரன்  ஏற்கனவே வைத்திலிங்கம், முக்கிய அமைச்சர்கள், கோகுல இந்திரா உள்ளிட்ட கட்சியின் மூத்த நிர்வாகிகளின் பதவிகளை பறித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று அதிமுக இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை செயலாளர் பொறுப்பில் இருந்து திருச்சி எம்பி குமாரை அதிரடியாக நீக்கினார்.

இதையடுத்து தைரியம் இருந்தால் கட்சிப் பதவியில் இருந்து முதல்வரை நீக்குங்கள் என்று திருச்சி எம்.பி. குமார் சவால் விடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 9 மாவட்டங்களில் மழை!

கார்களின் விலையை அதிரடியாக உயர்த்திய ஹூண்டாய் இந்தியா!

ஓடிடியில் எகோ!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 17

கலீதா ஜியாவின் இறுதிச் சடங்கில் ஜெய்சங்கர் பங்கேற்பு! மோடியின் கடிதம் மகனிடம் ஒப்படைப்பு!

SCROLL FOR NEXT