முகப்பு
தற்போதைய செய்திகள்

ஜம்மு-காஷ்மீரில் அதிகாலை மிதமான நிலநடுக்கம்! 

ஜம்மு-காஷ்மீரில் இன்று அதிகாலையில் 4.48 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 4.5 ஆக பதிவாகி உள்ளதாக இந்திய

Updated On : 11 டிசம்பர், 2017 at 8:24 AM
பகிர்:

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் இன்று அதிகாலையில் 4.48 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 4.5 ஆக பதிவாகி உள்ளதாக இந்திய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

இந்த நிலநடுக்கம் பூமிக்கடியில் சுமார் 33 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் கூடினர். இந்த நிலநடுக்கத்தினால் எந்தவித உயிர்சேதமும் ஏற்படவில்லை என தெரிகிறது. இருப்பினும் நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள், சேதங்கள் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

Advertisement

நேற்று இரவும் இதே பகுதியில் ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.