தற்போதைய செய்திகள்

மதுரை ஆதின மடத்திற்குள் நித்யானந்தா நுழைய இடைக்கால தடை நீட்டிப்பு: வழக்கு வரும் 19-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

DIN

மதுரை:  மதுரை ஆதின மடத்திற்குள் நித்யானந்தா நுழைய இடைக்கால தடை நீட்டிக்கப்பட்டுள்ளதோடு, வழக்கின் தீர்ப்பை வரும் 19-ம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 

மதுரை ஆதீன மடத்துக்கள் நித்யானந்தா நுழைவதற்கு நிரந்தர தடை விதிக்கக்கோரி ஜெகதலபிரதாபன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்து இருந்தார்.  இதனை விசாரித்த உய்ரநீதிமன்ற கிளை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

மேலும் ஜெகதலபிரதாபன் தாக்கல் செய்த  மனுவில், நித்யானந்தா ஆதீன மடத்திற்கள் நுழைய தடை விதித்துள்ள நிலையில், மடத்திற்கு செல்ல போலீஸ் பாதுகாப்பு கேட்டு நித்யானந்தா வழக்கு தொடர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நித்யானந்தா மடத்திற்குள் நுழைந்தால் தேவையில்லாத சர்ச்சைகள் ஏற்படும், எனவே, மடத்திற்குள் நுழையவும், மடத்தின் நிர்வாகத்தில் தலையிடவும் நித்யானந்தாவுக்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார். மனுவை பரிசீலனை செய்த உயர்நீதிமன்ற கிளை, நித்யானந்தா ஆதீன மடத்திற்குள் நுழைவதற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. 

இந்நிலையில் இன்று மதுரை ஆதின மடத்திற்குள் நித்யானந்தா நுழைய விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை நீட்டித்து வழக்கை வரும் 19-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் தேரோட்டம் கோலாகலம்!

நேரத்தை மிச்சப்படுத்தும் ஏஐ : 94% பணியாளர்களின் கருத்து என்ன?

சென்னை-நாகர்கோவில் சிறப்பு ரயில் 19 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

ஆயிரம்விளக்கு அருகே பூங்காவில் சிறுமியை கடித்த வளர்ப்பு நாய்கள்

ரே பரேலியில் காங்கிரஸ் தொண்டர்களைச் சந்திக்கிறார் பிரியங்கா

SCROLL FOR NEXT