தற்போதைய செய்திகள்

ஹிமாசலப் பிரதேச வெற்றி தமிழகத்திலும் தொடரும்: தமிழிசை நம்பிக்கை

DIN

சென்னை: ஹிமாசலப் பிரதேசத்தில் பாஜக-வின் வெற்றி தமிழகத்திலும் தொடரும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

68 தொகுதிகளை கொண்ட ஹிமாசலப் பிரதேச சட்டப்பேரவைக்கு கடந்த மாதம் 9-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. 338 வேட்பாளர்கள் போட்டியிட்ட இந்த தேர்தலில் 75.28 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தன. 42 மையங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே பாஜக பெருவாரியான தொகுதிகளில் முன்னிலை பெற்றும், ஆளும் காங்கிரஸ் கட்சியானது பின்னடவை சந்தித்தும் வருகிறது. 

ஆட்சி அரியாசனத்தில் அமர தேவையான 36 இடங்களில் பாஜக சுமார் 40 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இதனால், ஆளும் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி பத்து ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக ஆட்சியமைப்பது உறுதியாகியுள்ளது.

இதையடுத்து ஹிமாசலப் பிரதேசத்தில் பாஜக பெற்றுள்ள வெற்றியை தமிழக பாஜக இனிப்புகளை வழங்கி கொண்டாடி வருகிறது. 

அப்போது செய்தியாளர்களிடம் தமிழிசை பேசுகையில், எதிர்ப்பு விமர்சனங்களை முறியடித்துவிட்டு பாஜக வெற்றி பெற்றுள்ளது. ஹிமாசலப் பிரதேச வெற்றி தமிழகத்திலும் தொடரும் என நம்பிக்கை தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT