முகப்பு
தற்போதைய செய்திகள்

காதலை ஏற்றுக் கொள்ள மறுத்த 15 வயது மாணவியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு 16 வயது சிறுவன் தப்பி ஓட்டம்

காதலை ஏற்றுக் கொள்ளாத 15 வயது பள்ளி மாணவியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு 16 வயது சிறுவன் தப்பிச் சென்றுள்ள சம்பவம் அப்பகுதி

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:27 PM
பகிர்:

மதுரா: காதலை ஏற்றுக் கொள்ளாத 15 வயது பள்ளி மாணவியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு 16 வயது சிறுவன் தப்பிச் சென்றுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. 

உத்தரபிரதேச மாநிலம் மதுரா ரோட்வேஸ் காலனி பகுதியில் 16 வயதுடையன் சிறுவன் பள்ளிக்கு செல்லும் 15 வயது மாணவியை மறித்து தனது காதலை கூறி உள்ளார். அவனது காதலை அந்த மாணவி நிராகரித்ததால் மாணவியை தான் மறைத்து வைத்திருந்த  துப்பாக்கியால் சுட்டுதள்ளி விட்டு இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றுள்ளான். 

இதில், படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடித்த மாணவி, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மாணவியின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். தப்பிச் சென்ற சிறுவனை போலீஸார் தேடி வருகிறார்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →