தற்போதைய செய்திகள்

கோவை கொடிசியாவில் ரேக்ளா பந்தயம் தொடங்கிய உடனே நிறுத்தம்

DIN

கோவையில் அமைச்சர் வேலுமணி தொடங்கி வைத்த ரேக்ளா பந்தயம் இளைஞர்களின் கடும் எதிர்ப்பால் உடனே நிறுத்தப்பட்டது.
கோவை கொடிசியா மைதானத்தில் இன்று காலை ரேக்ளா பந்தயம் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இதற்கான ஏற்பாடுகளை, கோவை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டிருந்தது. இதன்படி, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ரேக்ளா பந்தயத்தை தொடங்கி வைத்தார்.
ஆனால், இந்த பந்தயத்தில் 200 வண்டிகள் பங்கேற்கும் என கூறப்பட்ட நிலையில், வெறும் 4 வண்டிகளே பங்கேற்றன. மேலும், போட்டி நடைபெறும் இடத்தில், ஏராளமான இளைஞர்களும், பொதுமக்களும் திரண்டு ரேக்ளா பந்தயம் நடத்துவதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அமைச்சரின் காரையும் அவர்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டம் நடத்தியவர்களை போலீஸார் கைது செய்தனர். ஆனால், ரேக்ளா பந்தயத்தில் வெறும் 4 வண்டிகளே பங்கேற்றதால், வேறு வழியின்றி, போட்டியை மேற்கொண்டு நடத்த முடியாமல், அதிகாரிகள் நிறுத்தினர்.
சம்பவ இடத்தில், அமைச்சர் வேலுமணி தொடர்ந்து, மேற்பார்வை செய்துவருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பெண்களுக்கு எதிராக பாஜக செயல்படுகிறது’

வேதாரண்யத்தில் உப்பு அள்ளி தியாகிகளுக்கு அஞ்சலி

குடிமராமத்து திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தல்

நீா்மோா் பந்தல்: பாஜகவினருக்கு அண்ணாமலை வேண்டுகோள்

குருவாடி மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா

SCROLL FOR NEXT