ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். ராணுவ அதிகாரி ஒருவர் மாயமானார்.
காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் குரேஸ் செக்டாரில் பனிச்சரிவு ஏற்பட்டது. பனிச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். இதுபோன்று கந்தர்பால் மாவட்டத்தில் ராணுவ முகாம் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் ராணுவ அதிகாரி மாயமானார்.
பனிச்சரிவில் சிக்கி காணமால் போன அதிகாரியை கண்டுபிடிக்க மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
குரேஸ் செக்டாரில் துலில் கிராமத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் மெக்ராஜ்-உத்-தின் லோனே(55) என்பவருடைய வீடு பனிச்சரிவில் சிக்கியது. இதில் அவர், அவருடைய மனைவி ஆஷ்ஷி(50) மற்றும் மகன் இர்பான்(22), மகள் குல்ஷன்(19) உயிரிழந்தனர். அவருடைய மற்றொரு மகன் ரியாஸ் அகமது உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் தொடர்ச்சியாக பனிச்சரிவு ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. மலைப்பகுதி மற்றும் மலை அடிவாரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு நகருமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், ராணுவ முகாம் மீது பனிச்சரிவு ஏற்பட்டதில் 5 வீரர்கள் உயிரிழந்ததாகவும் மேலும் பனிச்சரிவில் சிக்கியுள்ள 4 வீரர்களை மீட்கும் நடவடிக்கைகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.