தற்போதைய செய்திகள்

ஜல்லிக்கட்டு போராட்ட வெற்றியில் அரசியல் கட்சிகளுக்கும் பங்குண்டு:  ஜி.கே.வாசன் பேட்டி

ஜெயப்பாண்டி

ஜல்லிக்கட்டு போராட்ட வெற்றியில் அரசியல் கட்சிகளுக்கும் பங்குண்டு என தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.

மதுரையில் திங்கள்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் பிரமுகர் இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் பரவலைத் தடுக்கவும், பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கவும் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.

நீட் தேர்வு தமிழகத்தில் செயல்படுத்தப்படாது என்பதை சட்டப்பேரவை நடக்கும் இச்சமயத்தில் உறுதி செய்வது அரசின் கடமை. மருத்துவ நுழைவுத் தேர்வு விசயத்தில் பழைய முறையே செயல்படுத்தப்படவேண்டும்.

விவசாயம் பொய்த்துப் போன நிலையில், மதுரை மாவட்டம் பெரியார் பாசன விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கவேண்டும்.

கலாசார, பண்பாடைக் காக்கும் வகையில் ஜல்லிக்கட்டுகளை பத்து நாள்களுக்குள் நடத்தவேண்டும். பீடா மீதான நடவடிக்கையை அரசே மேற்கொள்வது அவசியம். ஜல்லிக்கட்டு போராட்டம் அமைதியாக நடந்த நிலையில், இறுதியில் நடந்த வன்முறையை அரசு தடுக்கத் தவறிவிட்டது. சட்டம், ஒழுங்கை பராமரிப்பது அரசின் கடமை.

ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் தமிழகத்தின் வாழ்வாதார நீராதாரப் பிரச்னைகள் திசை திருப்பப்பட்டுவிட்டதாக கூறமுடியாது. அரசு தனது கடமையிலிருந்து தவறினால், அதை இளைஞர்கள், பொதுமக்கள் கண்காணித்து தட்டிக்கேட்பர்.

ஜல்லிக்கட்டு போராட்ட வெற்றி என்பது எந்த தனி அமைப்புக்கும் சொந்தமானதல்ல. அதற்கு தனிப்பட்ட யாரும் உரிமைகோர முடியாது. 

பொதுமக்கள், மாணவர், இளைஞர் போராட்ட வெற்றிக்கு அரசியல் கட்சிகளின் தொடர் போராட்டம், கட்சிகள் எழுப்பிய குரலே அடித்தளமாக அமைந்தது. ஆகவே ஜல்லிக்கட்டு வெற்றியில் அரசியல் கட்சிகளுக்கும் பங்குள்ளது என்றார்.

பேட்டியின்போது மதுரை மாநகர் மாவட்ட தமாகா தலைவர் வழக்குரைஞர் பி.சேதுராமன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கே.எஸ்.கே.ராஜேந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT