காஷ்மீர் பனிச்சரிவில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு முதல்வர் நாராயணசாமி இரங்கல்
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு முதல்வர் நாராயணசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
புதுச்சேரி: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு முதல்வர் நாராயணசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
கடந்த சில நாள்களாக பனிச்சரிவில் சிக்கி 20-க்கு மேற்பட்ட ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இதைக் கேட்டு ஆறா துயரம் அடைந்தேன். உயிரிழந்த ராணுவ வீரர்கள் இழப்பு அவர்களது குடும்பத்துக்கு மட்டுமின்றி நாட்டுக்கே பேரிழப்பாகும்.
அவர்களில் தமிழகத்தின் மதுரை மாவட்டத்தை சேர்ந்த சுந்தரபாண்டியனும் ஒருவர். அவர் தனது பகுதியில் 40-க்கு மேற்பட்டோருக்கு பயிற்சி அளித்து ராணுவத்திலும் சேர உதவினார்.
தன்னலமறற தியாக உணர்வுடன் செயல்பட்ட சுந்தரபாண்டியன் தனது கர்ப்பிணி மனைவியை விட்டு வீரமரணம் அடைந்தார். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
அதே போல் பனிச்சரிவில் சிக்கி இறந்த வீரர்கள் குடும்பத்தினருக்கும் என் சார்பிலும், புதுவை அரசு சார்பிலும் இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன்.