தற்போதைய செய்திகள்

தில்லியில் கொட்டும் மழையில் இரண்டாவது நாளாக தமிழக விவசாயிகள் போராட்டம் 

DIN

புதுதில்லி:  தில்லியில் இரண்டாவது நாளாக ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பயிர்க் கடன் தள்ளுபடி, தேசிய நீர்வழிச் சாலையை உருவாக்குவது, 60 வயது நிரம்பிய விவசாயிகளுக்கு ஓய்வூதியம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  பிரதமர் நரேந்திர மோடி இல்லம் அருகே ஞாயிற்றுக்கிழமை தர்னாவில் ஈடுபட முயன்ற தமிழக விவசாயிகள் சுமார் 100 பேரை தில்லி போலீஸார் தடுப்புக் காவலில் வைத்தனர்.

பின்னர் மாலையில் அனைவரையும் விடுவித்தனர். இந்நிலையில்  இன்று தில்லியில் பலத்த மழை பெய்த போதிலும் தங்களது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ள தமிழக விவசாயிகள் கொட்டும் மழையில் தங்களது போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT