தற்போதைய செய்திகள்

தயாரிப்பாளர் சங்கம்-பெப்சி இடையிலான ஒப்பந்தம் ரத்து: விஷால் அறிவிப்பு

தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி இடையிலான ஒப்பந்தம் ரத்து என விஷால் அறிவித்துள்ளார்.

DIN

சென்னை: தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி இடையிலான ஒப்பந்தம் ரத்து என விஷால் அறிவித்துள்ளார்.

திரைப்பட தயாரிப்பாளர்களுக்கும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சங்கத்துக்கும் இடையே, 3 ஆண்டுக்கு ஒரு முறை புதிய சம்பளம் நிர்ணயிப்பது வழக்கம். இதுகுறித்து தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது: -

தயாரிப்பாளர் சங்கம்-பெப்சி இடையிலான ஒப்பந்தம் ரத்து செய்யப்படுகிறது. ஊதிய பிரச்னையை காரணம் காட்டி படப்பிடிப்பை நிறுத்த பெப்சி ஊழியர்களுக்கு அதிகாரம் இல்லை. ஊழியர்கள் மீது மரியாதை இருந்தாலும் தயாரிப்பாளர்களை அவமானப்பட விடமாட்டோம்.

பெப்சி அமைப்பில் இல்லாத தொழிலாளர்களை வைத்து நாளை முதல் படப்பிடிப்பை நடத்திக்கொள்ள தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது எனவே விருப்பமானவர்களை வைத்து தயாரிப்பாளர்கள் படப்பிடிப்பை எடுத்துக்கொள்ளலாம் என்று அவர் அறிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பசும்பொன் செல்லும் வழியில் ஓபிஎஸ் - செங்கோட்டையன் - டிடிவி தினகரன் சந்திப்பு!

உணவு டெலிவரி ஊழியரை கார் ஏற்றிக் கொன்ற தம்பதி! பெங்களூரில் பதறவைக்கும் விடியோ

டெங்கு காய்ச்சல் பரவல் தீவிரம்: அரசு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்- ராமதாஸ்

அமித் ஷாவின் பதில்தான் எங்களுடையதும்; கூட்டணி விரிவுபடுத்தப்படும்: தமிழிசை

பயங்கரவாதிகளுடன் தொடர்பு: ஜம்மு-காஷ்மீரில் 2 அரசு அதிகாரிகள் பணிநீக்கம்!

SCROLL FOR NEXT