தற்போதைய செய்திகள்

சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி எஸ் 3 டேப்லட் இந்திய சந்தையில் அறிமுகம்

DIN

சாம்சங் நிறுவனம், அதன் புதிய கேலக்ஸி எஸ்3 டேப்லட்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. எல்டிஈ தொழில்நுட்ப வசதியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த கேலக்ஸி எஸ்3 டேப்லட் விலை ரூ.47,990 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மென்பொருள் அம்சங்களை பொருத்த வரை கேலக்ஸி டேப் எஸ்3 டேப்லெட்டில் ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம் மற்றும் புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, f/1.9 அப்ரேச்சர், எல்இடி பிளாஷ் மற்றும் 5 எம்பி செல்ஃஃபி கேமரா, f/2.2 அப்ரேச்சர் வழங்கப்பட்டுள்ளது.  

இத்துடன் 4 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டெர்னல் மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இந்த டேப்லட் வாங்க விரும்புவோர் மேலுறை ரூ.2,999 விலைக்கும், கீபோர்டு கவர் ரூ.8,499 விலைக்கும் வாங்க வேண்டும் என, சாம்சங் தெரிவித்துள்ளது.

அறிமுக காலச் சலுகையாக, சாம்சங் டேப்லட் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு, ரிலையன்ஸ் ஜியோ உடன் இணைந்து, 28 ஜிபி + 28 ஜிபி என டபுள் டேட்டா சலுகை ரூ.309 விலையில் வழங்கப்படுவதாக, சாம்சங் நிறுவனம் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எங்கே செல்வது? கதறும் பாலஸ்தீன மக்கள்!

ஹவாலா முறையில் ரூ.100 கோடி.. கேஜரிவால் வழக்கில் அமலாக்கத் துறை அடுக்கும் ஆதாரங்கள்

ஜெயக்குமார் மரணம்: விசாரணையில் அடுத்தடுத்து திருப்பம்!

தங்கலான் வெளியீட்டுத் தேதி இதுதானா?

வாரணாசி கோவிலில் கொல்கத்தா அணி வீரர்கள்!

SCROLL FOR NEXT