தற்போதைய செய்திகள்

மும்பையில் பலத்த மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

DIN

மும்பை:  மும்பை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகள் நேற்று இரவில் பலத்த மழை பெய்தது. கடந்த வாரம் முதல் பெய்துவரும் கனமழையால் மும்பையின் தாழ்வான பகுதிகள் மழை நீரால் சூழப்பட்டு வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

சயன், கிங் சர்க்கிள், ஹிந் மாதா, தாதர் உள்ளிட்ட பல முக்கிய பகுதிகளில் வெள்ள நீர் தேங்கி நிற்கிறது. மழை நீரால் உருவான வெள்ளம் பல பகுதிகளில் வடியாததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

கடந்த ஒரு மணி நேரத்தில் பதிவான மழையின் அளவு (12 மணி முதல் 1 மணி வரை) விக்ரோலி -24 மிமீ, குர்லா -14 மி.மீ., திண்டுசிஹி -18 மிமீ, கோரேகான் மற்றும் ஆதேரி -13 மிமீ, பி.கே.சி -11 மிமீ மற்றும் பாந்த்ரா -10 மிமீ  மழை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே கல்வா உள்ளிட்ட இடங்களில் ரயில்வே இருப்பு பாதையை சூழந்த மழை நீர் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. மின்சார ரயில்கள் இயக்கப்பட்டாலும் வேகமாக செல்வதை தவிர்க்குமாறு ரயில் டிரைவர்களுக்கு அறிவுறுத்தல் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் அடுத்த 24 மணிநேரத்திற்கு மும்பையில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்ந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

குடிநீா் விநியோகப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

ஒட்டங்காடு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

SCROLL FOR NEXT