தற்போதைய செய்திகள்

பேரறிவாளனுக்கு பரோல் வழங்குவது குறித்து முதல்வர் முடிவெடுப்பார்: அமைச்சர் சி.வி.சண்முகம் 

DIN

சென்னை:  பேரறிவாளனுக்கு பரோல் வழங்குவது குறித்து முதல்வர் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம் இதுகுறித்து அவர் முடிவெடுப்பார் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.

சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, பேரறிவாளன் விடுதலை குறித்து செய்தியாளரகள் கேள்வி கேட்ட போது அவர் இவ்வாறு தெரிவித்தார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்ய வேண்டும் என கடந்த ஆண்டு மார்ச் மாதம் சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழக அரசின் தலைமைச் செய லாளர் மூலம் மத்திய உள்துறை செயலாளருக்கு கடிதமும் அனுப்பப் பட்டது. ஆனால், தற்போது பேரறி வாளனுக்கு பரோல் வழங்க முடி யாது என தமிழக அரசு மறுத்துள் ளது ஏன்?

சஞ்சய் தத் போன்றவர்களுக்கு பரோல் வழங்கப்பட்ட முன்னுதாரணத்தை கருத்தில் கொண்டு பேரறிவாளனுக்கு பரோல் வழங்குவது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்த நிலையில் செய்தியாளர்கள் எழுபிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் சி.வி.சண்முகம், பேரறிவாளனுக்கு பரோல் வழங்குவது குறித்து முதல்வர் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம் இதுகுறித்து அவர் முடிவெடுப்பார் என்று தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வானம், நிலவு, கடல்.. அஞ்சலி!

ராபாவில் இஸ்ரேல் நேரடித் தாக்குதல்? மக்களை இடம்பெயரக் கோரும் புதிய அறிவிப்பு!

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் தடையில்லா மின் விநியோகம் -தலைமைச் செயலாளர்

பொருளின் பொருள் கவிதை

ப்ளிங்க் - சிந்திக்காமலேயே சிந்திக்கும் ஆற்றல்

SCROLL FOR NEXT