முகப்பு
தற்போதைய செய்திகள்

விவசாயிகளின் பயிர்க் கடனை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும்: சீமான்

தில்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளை இன்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் நேரடியாக சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:10 PM
பகிர்:

தில்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளை இன்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் நேரடியாக சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: விவசாயிகளின் நலனை காக்க வேண்டிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆர். கே. நகரில் பூத் ஏஜெண்டாக பணியாற்றி வருகிறார்.

இரட்டை இல்லையை காப்பாற்றுவதிலேயே அக்கறை காட்டுகின்றனர். அதனால் இன்று விவசாயிகள் வீதியில் உள்ளனர்'' என்று குற்றம் சாடினார். மேலும் கூறும் போது கூடங்குளத்தில் தயாரிக்கப்படும் மின்சாரத்தை அண்டை மாநிலங்களுக்கு பகிர்ந்து கொடுக்கின்றனர்.

ஆனால், தமிழகத்திற்கு தர வேண்டிய நீரை அந்த அண்டை மாநிலங்கள் கொடுப்பதில்லை. கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களுக்கு அதிகப்படியான வறட்சி நிதி ஒதுக்கி, தமிழகத்திற்கு குறைவான நிதியை ஒதுக்குகின்றனர்.

இந்த விஷயத்தில் மத்திய அரசுதான் பொறுப்புடன் செயல்பட வேண்டும். விவசாயிகளின் பயிர்க் கடனை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். 

முழு கட்டுரையைப் படிக்க →