ரஜினியின் 161-வது படம் 'காலா'
ரஜினியின் 161-வது படத்துக்கு காலா என பெயர் சூட்டப்பட்டுள்ளது. காலா படத்தலைப்புக்கு கீழே கரிகாலன் என சப்டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
ரஜினியின் 161-வது படத்துக்கு காலா என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
கபாலி படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் ரஜினி, ஷங்கர் இயக்கத்தில் '2.0' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து ரஜினியின் அடுத்த படத்தை, நடிகரும் ரஜினியின் மருமகனுமான தனுஷ் தயாரிக்கறார்.
கபாலி படத்தை இயக்கிய ரஞ்சித் இந்தப் படத்தை இயக்குகிறார். கதையின் பெரும்பகுதி மும்பை தாராவி பகுதியில் நடப்பது போல அமைந்துள்ளது. இதற்காக தாராவியின் செட்டை சென்னையில் அமைக்கும் பணியில் படக்குழுவினர் இறங்கியுள்ளனர்.
இந்நிலையில், ரஜினியின் 161-வது படத்துக்கு காலா என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதனை நடிகர் தனுஷின் வுண்டார்பார் பிலிம்ஸ் நிறுவனம் இன்று காலை 10 மணிக்கு வெளியிட்டது. காலா படத்தலைப்புக்கு கீழே கரிகாலன் என சப்டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து படத்தின் இயக்குநர் ரஞ்சித் கூறுகையில், கரிகாலன் என்ற பெயரின் சுருக்கமே காலா. ரஜினிக்கு பிடித்த பெயர் என்பதால் காலா என வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் 28ஆம் தேதி தொடங்குகிறது என்றார்.