தற்போதைய செய்திகள்

தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார் பிகார் முதல்வர் நிதிஷ்குமார் 

DIN

புதுதில்லி:  தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை இன்று அவரது இல்லத்தில் பிகார் முதல்வர் நிதிஷ்குமார் சந்தித்து பேசினார்.

உணவு இடைவேளைக்குப் பிறகு நடைபெற்ற இந்த சந்திப்பில் குடியரசுத்தலைவர் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளன. எனினும் கங்கையை சுத்தப்படுத்துவது தொடர்பாக பிரதமருடன் பேசியதாக நிதிஷ்குமார் கூறியுள்ளார்.

முன்னதாக நேற்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளர் தேர்வு செய்வது தொடர்பாக எதிர்க்கட்சி கூட்டம் நடைபெற்றது.

அதில் 17 கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர் இந்த கூட்டத்தில் பிகார் முதல்வர் நிதிஷ்குமார் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி அருகே கட்டடத் தொழிலாளி மரணம்

செங்கோட்டையில் திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பிளஸ் 2: தென்காசி மாவட்டம் 96.07 சதவீத தோ்ச்சி

‘தென்காசி மாவட்டத்தில் மகளிா் தங்கும் விடுதி உரிமங்கள் புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்கலாம்’

பிளஸ் 2 தோ்வு: நெல்லை மாவட்டத்தில் 96.44 சதவீதம் போ் தோ்ச்சி

SCROLL FOR NEXT