தற்போதைய செய்திகள்

கூட்டுறவு கடன் தள்ளுபடி உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு 

DIN

சென்னை:  கூட்டுறவு வங்கி விவசாய கடன் தள்ளுபடி விவகாரத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என கூறி உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.   

கடந்த 2016ம் ஆண்டு 5 ஏக்கர் வரை வைத்திருப்போரின் விவசாய கடன்களை தள்ளுபடி செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால் 5 ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்திருந்தாலும் அனைத்து விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என அய்யாக்கண்ணு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் சிறு,குறு என பாகுபாடு காட்டாமல், கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன், நகைக்கடன் அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என நீதிபதிகள் முரளிதரன், நாகமுத்து ஆகியோர் உத்தரவிட்டனர்.

இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்துள்ளது. கடன் தள்ளுபடியை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்துள்ளதால் தமிழக விவசாயிகள் அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அழகிய தீயே.....மதுமிதா

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கானது: பாட் கம்மின்ஸ்

மே.வங்கம்: 25,000 ஆசிரியர் பணி நியமனங்கள் ரத்து - இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பைத்தான் குழுவை பணிநீக்கம் செய்த கூகுள்! மென்பொருள் துறையில் அதிர்ச்சி!!

SCROLL FOR NEXT