வருமான வரித்துறையினர் நடத்தும் சோதனையில் அரசியல் உள்நோக்கம் இருக்கக்கூடாது: ஜி.கே. வாசன்
வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று தமிழகம் முழுவதும் ஒரே சமயத்தில் சசிகலா மற்றும் அவரது உறவினர்கள்
சென்னை: வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று தமிழகம் முழுவதும் ஒரே சமயத்தில் சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். ஜெயா டிவி அலுலவகத்தில் தொடங்கி கோடநாடு எஸ்டேட் வரை இந்த சோதனைப் பட்டியல் நீள்கிறது.
இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள ஜி.கே.வாசன், வருமான வரித்துறையினர் நடத்தும் சோதனையில் அரசியல் உள்நோக்கம் இருக்கக்கூடாது என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.
மேலும் வி.கே. சசிகலாவிற்கு சொந்தமான நிறுவனங்கள் மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் நடக்கும் வருமான வரி சோதனை குறித்து மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.