முகப்பு
தற்போதைய செய்திகள்

தமிழகம் முழுவதும் 150 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை

டிடிவி தினகரன், சசிகலா சம்பந்தப்பட்ட உறவினா்கள், நண்பா்கள், ஆதரவாளா்களின் வீடுகள் அலுவலகங்கள் என 150க்கும்

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:05 PM
பகிர்:

டிடிவி தினகரன், சசிகலா சம்பந்தப்பட்ட உறவினா்கள், நண்பா்கள், ஆதரவாளா்களின் வீடுகள் அலுவலகங்கள் என 150க்கும் அதிகமான இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.

இன்று அதிகாலை 6 மணி முதல் ஜெயா டிவி, நமது எம்.ஜி.ஆா். அலுவலகங்கள், இளவரசியின் மகள் வீடு, சசிகலாவின் கணவா் நடராஜன் வீடு, தினகரனின் சென்னை, மன்னார்குடி வீடுகள், திருச்சியில் உள்ள இளவரசியின் சம்பந்தி வீடு, திவாகரனின் கல்லூரி உள்ளிட்ட 150க்கும் அதிகமான இடங்களில் வருமான வாரி சோதனை நடைபெற்று வருகிறது.

சசிகலாவின் குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுக்கு சொந்தமான 150 இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் கொண்ட குழு சோதனை நடத்தி வருகின்றனர். கலா குடும்பத்தினருக்கு சொந்தமான சிறுதாவூர் பங்களாவில் சோதனை நடைபெறவில்லை என கூறப்படுகிறது.

புதுச்சேரியை அடுத ஆரோவில் பகுதியில் டி.டி.வி தினகரனின் பண்ணை வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. 

முழு கட்டுரையைப் படிக்க →