முகப்பு
தற்போதைய செய்திகள்

தொடர் மழையால் பாபநாசம், சேர்வலாறு அணைகளுக்கு 33000 கனஅடி நீர்வரத்து

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் இன்று பகலில் பெய்த பலத்த மழையால் பாபநாசம், சேர்வலாறு அணைகளின் நீர்வரத்து பகல் 1 மணி நிலவரப்படி 33000 கனஅடியாக இருந்தது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:15 PM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் இன்று பகலில் பெய்த பலத்த மழையால் பாபநாசம், சேர்வலாறு அணைகளின் நீர்வரத்து பகல் 1 மணி நிலவரப்படி 33000 கனஅடியாக இருந்தது. இதையடுத்து 5 மணி நேரத்தில் பாபநாசம் அணை நீர்மட்டம் 10 அடி உயர்ந்து 114 அடியாக உயர்ந்துள்ளது. 

இதேபோல், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 30 அடி உயர்ந்து அணை முழுக் கொள்ளளவை நெருங்கும் சூழல் உருவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து அணையில் இருந்து 2000 கனஅடி திறந்துவிடப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் சேர்வலாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதாலும் தாமிரவருணியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →