முகப்பு
தற்போதைய செய்திகள்

பிரதமர் அலுவலகத்தில் தீ விபத்து: 20 நிமிடங்களில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது

பிரதமர் அலுவலகத்தில் இன்று அதிகாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்து 20 நிமிடங்களில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

Updated On : 17 அக்டோபர், 2017 at 8:24 AM
பகிர்:

புதுதில்லி: பிரதமர் அலுவலகத்தில் இன்று அதிகாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்து 20 நிமிடங்களில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

தில்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தின் இரண்டாவது மாடியில் உள்ள அறை எண் 242-இல் இன்று அதிகாலை சுமார் 3.35 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இதனையடுத்து தீயணைப்பு நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் 20 நிமிடங்களில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர் என தீயணைப்பு துறை அதிகாரி குருக் குமார் சிங் கூறினார். 

Advertisement

கம்பியூட்டர் யுபிஎஸ்ஸி-இல் ஏற்பட்ட தீ காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தீ விபத்து சம்பவத்தால் எந்தவொரு சேதங்கள், பாதிப்புகள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.