தற்போதைய செய்திகள்

ராணுவ வீரர்கள் கடமை முடிந்த பிறகு சிறந்த யோகா பயிற்றுனர்கள் ஆக முடியும்: பிரதமர் மோடி

DIN

வடமாநிலங்களில் இன்று தீபாவளி கொண்டாடப்படுகிறது. ஜம்மு காஷ்மீர் குரேஸ் பள்ளத்தாக்கு பகுதியில் தீபாவளி கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர்,  மத்திய அரசு ஆயுதப்படைகளின் நலனில் உறுதியுடன் உள்ளது. 

உதாரணமாக ஒரே பதவி ஒரே ஓய்வூதியத்தை குறிப்பிட்ட அவர். இதுபோன்ற நன்நாளில் வீரர்கள் மத்தியில் நேரத்தை செலவிடும் போது அவர்கள் புதிய ஆற்றல் பெறுகிறார்கள். கடுமையான நிலைமைகளின் போது வீர்கள் செய்யும் தவம் மற்றும் தியாகத்தை பிரதமர் பாராட்டினார். 

இந்த ஆண்டு தீபாவளியை நான் எனது குடும்பத்துடன் கொண்டாட விரும்பினேன். அதனால்தான்  இராணுவ வீரர்களிடையே கொண்டாடிக்கொண்டிருக்கிறேன். நான் ராணுவ வீரர்களை எனது குடும்பமாக கருதுகிறேன் என்றார். 

மேலும் ராணுவ வீரர்கள் கடமை முடிந்தபிறகு ஆயுதப்படைகளை விட்டு வெளியேறியப் பின்னர் சிறந்த யோகா பயிற்றுனர்கள் ஆக முடியும் என்றும் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT