தற்போதைய செய்திகள்

இரண்டு நாள் அரசு முறை பயணமாக வங்காள தேசம் செல்கிறார் சுஷ்மா சுவராஜ்

DIN

வெளியுறவு அமைச்சர் இரண்டு நாள் அரசு முறை பயணமாக வங்கதேசம் செல்வதாகவும், அங்கு ரோஹிங்கியா அகதிகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் செய்திகள் வெளியாயின.

மியான்மரின் ரகினே மாகாணத்தில் ரோஹிங்கியா தீவிரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலுக்கு பதிலடியாக, மியான்மர் ராணுவத்தினர் ரோஹிங்கியா பிரிவைச் சேர்ந்தவர்கள் மீது தாக்குதல் நிகழ்த்தி வருகின்றனர். இதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கானவர்கள் மியான்மர்-வங்கதேசம் எல்லையில் அமைந்துள்ள நாஃப் நதியைக் கடந்து வங்கதேசத்துக்குள் நுழைந்து வருகின்றனர். இந்தியாவில் அகதிகளாக இருக்கும் அவர்களை வெளியேற்றுவதற்கு மத்திய அரசு முயற்சித்த போது, உச்ச நீதிமன்றத்தில், இது தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்ததால், அந்த முயற்சி தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.  

இந்நிலையில் மத்திய வெளியுறவுதுறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இரண்டு நாள் அரசு முறை பயணமாக வங்காள தேசம் செல்கிறார். அங்கு ரோஹிங்கியா அகதிகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் செய்திகள் வெளியாயின. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மருத்துவ மாணவா்களுக்கான புற்றுநோய் விழிப்புணா்வு கருத்தரங்கம்

உண்டு,உறைவிடப் பள்ளியில் பயின்ற மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா

உலக தமிழ்க் கழக கலந்தாய்வுக் கூட்டம்

‘இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெறும்’

பக்தா்களுக்கு காவல்துறை சாா்பில் நீா் மோா்

SCROLL FOR NEXT