தற்போதைய செய்திகள்

ஓணம் பண்டிகை: புதுச்சேரி முதல்வர், தலைவர்கள் வாழ்த்து

ஓணம் பண்டிகையை முன்னிட்டு முதல்வர் நாராயணசாமி உள்பட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ப. சுஜித்குமார்

புதுச்சேரி:  ஓணம் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உள்பட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

முதல்வர் நாராயணசாமி:

நாட்டை சிறந்த முறையில் ஆண்டு வந்த மகாபலி மன்னன்  தன் மக்கள் அனைத்து வளங்களையும் பெற்று மகிழ வேண்டும், அதை தான் காண வேண்டும் என்பதற்காக வேண்டிக் கொண்டதை மகாவிஷ்ணு ஏற்று வரமளித்ததாகவும், அதனால் ஆண்டின் முதல் நாள் அதாவது மலையாள புத்தாண்டு பிறப்பு அன்று மகாபலி மன்னன் பூமிக்கு வந்து தனது நாட்டையும் மக்களையும் பார்த்து செல்வதாக உள்ள நம்பிக்கையின் அடிப்படையில் கொண்டாடப்படும் ஓணம் திருநாளை கொண்டாடும் புதுவை மாநில மலையாள மக்களுக்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இத்திருநாள் மதங்களை கடந்த அனைத்து மலையாள மக்களாலும் கொண்டாடப்படுவது இதன் சிறப்பாகும். வேற்றுமையில் ஒற்றுமை என்ற சாகாவரம் பெற்ற வார்த்தைகளுக உரமிட்டு மெய்ப்பித்துக் காட்டும் இக்கொண்டாட்டத்துக்கு நல்வாழ்த்துகள் என்றார்.

நலத்துறை அமைச்சர் கந்தசாமி:

அத்தப்பூ கோலமிட்டு வண்ண எண்ணங்களுடன் மகாபலி மன்னனை வரவேற்கும் இப்பண்டிகை நம் பாரம்பரியத்தின் மகத்துவத்தை உலகெங்கும் பறைசாற்றுவதில் பெருமை கொள்வோம்.

நாட்டின் முன்னேற்றத்தின் மாநிலத்தின் பங்கும், மாநில முன்னேற்றத்தில் பிராந்தியத்தின் பங்கும் அவசியம் என்பதை உணர்ந்து புதுவை மாநில வளர்ச்சியில் மாஹே பிராந்தியத்தியன் பங்கும் அளப்பரியது.

மொழியாலும், இனத்தாலும் வேறுபட்டிருந்தாலும், முன்னேற்றப்பாதையில் தொடர்ந்து பயணிப்போம் என உறுதியேற்று மலையாள சகோதர சகோதரிகளுக்கு ஓணம் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மீண்டும் மகாபாரதம்! நாள்தோறும் காலை ஒருமணி நேரம் ஒளிபரப்பாகிறது!

பெத் மூனி அதிரடி: இந்தியாவை வீழ்த்தி ஆஸி. அபார வெற்றி!

எம். ஆர். ராதா மகள் என்பதை நிரூபித்திருக்கிறேன்: ராதிகா சரத்குமார்

புதிய தொடரில் மீண்டும் ஜோடி சேரும் பாக்கியா - கோபி ஜோடி!

ஒருநாள், டெஸ்ட் தொடர்களுக்காக தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸி.!

SCROLL FOR NEXT