தற்போதைய செய்திகள்

ராமஜென்ம பூமி வழக்கு தொடுத்த அயோத்தி சாமியார் மகந்த் பாஸ்கர் தாஸ் காலமானார்

அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராமஜென்ம பூமி வழக்கு தொடுத்த அயோத்தி சாமியார் மகந்த் பாஸ்கர் தாஸ் காலமானார்.

DIN

அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராமஜென்ம பூமி வழக்கு தொடுத்த அயோத்தி சாமியார் மகந்த் பாஸ்கர் தாஸ் காலமானார். அவருக்கு வயது 89. மகந்த் பாஸ்கர் தாசுக்கு கடந்த புதன்கிழமை இரவு திடீரென சுவாசக் கோளாறு ஏற்பட்டது.

உடனடியாக பைசாபாத்தில் உள்ள ஹர்சன் இதய மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை 3 மணிக்கு மரணம் அடைந்தார்.

மகந்த் பாஸ்கர் தாஸ் உடல், உடனடியாக பைசாபாத் நகா ஹனுமதி காதிக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

அதைத் தொடர்ந்து சரயு ஆற்றங்கரையில் அவரது உடல், பிற்பகலில் தகனம் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் முதல்முறையாக குளிர்சாதன மின்சார பேருந்து சேவை தொடக்கம்!

இந்த நாடு, 2025க்குள் 10 லட்சம் பேரை இழந்துவிடும்! எலான் மஸ்க் எச்சரிக்கை

4 நகரங்கள் டிஜிட்டல் மையங்களாக உருவாக்கப்படும்: ஒடிசா முதல்வர்!

ராஜ பார்வை... நபா நடேஷ்!

அதிரடி... ஆக்சன்... மதராஸி மேக்கிங் விடியோ!

SCROLL FOR NEXT