தற்போதைய செய்திகள்

தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ஜேம்ஸ் மாட்டிஸ்

DIN

இரண்டு நாள் சுற்றுப் பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ஜேம்ஸ் மாட்டிஸ் தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை, பாகிஸ்தான் - சீனா உறவு குறித்தும் இருவரும் கலந்து பேசியதாக தெரிகிறது. முன்னதாக இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார்.  

பாதுகாப்புத்துறையில் இந்தியா அமெரிக்கா இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்த இரு நாடுகளும் உறுதி எடுத்துள்ளன. மேலும் அமெரிக்காவிடம் இருந்து போர் விமானங்கள், கடலுக்கு மேல் பறக்கும் தானியங்கி விமானங்கள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.  

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றப் பிறகு அவரது அமைச்சரவையில் இருந்து ஒருவர் இந்தியா வருவது இதுவே முதல் முறை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT