லாகூர்: ஜார்கண்ட் செரண்டாக் வனப்பகுதியில் மாவோயிஸ்டு தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த மோதலில் 5 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஜார்கண்ட் மாநிலம் லெதார் மாவட்டம், செரண்டாக் வனப்பகுதியில் மாவோயிஸ்டு தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்புப் படை வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மறைந்திருந்த மாவோயிஸ்டுகள், பாதுகாப்புப் படையினர் மீது திடீரென துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர். இதனைத் தொடர்ந்து, இருதரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை வெடித்தது. இந்தச் சண்டையில் 5 மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
மாவோயிஸ்டுகளுடன் மாவட்ட போலீஸ் மற்றும் சிஆர்பிஎஃப் வீரர்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர் என காவல்துறை கண்காணிப்பாளர் பிரசாந்த் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.