புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரதம்
மத்திய அரசைக் கண்டித்து சுதேசி மில் அருகே முதல்வர் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரதம்
புதுச்சேரி: மத்திய அரசைக் கண்டித்து சுதேசி மில் அருகே முதல்வர் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.
கடந்த 4 ஆண்டுகளாக தவறான பொருளாதாரக் கொள்கையைக் கடைப்பிடித்து, அனைத்து தரப்பு மக்களையும் அல்லல்பட வைத்த மத்திய பாஜக அரசால் நாடு முழுவதும்
இருள் சூழ்ந்துள்ளது. நாட்டின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தலித் வன்கொடுமை சட்டத்தை நீர்த்துப் போகச் செய்தது, காவிரி மேலாண்மை வாரியம்
அமைக்கும் விவகாரத்தில் மெத்தனம், எதிரிகள் மீதி பழி போடுவது என பாஜக அரசின் சாயம் வெளுக்கத் தொடங்கியுள்ளது.
எனவே, மதச் சார்பின்மை, தேச ஒற்றுமை, சகோதரத்துவம் உள்ளிட்ட நற்பண்புகளைக் காக்க, நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் இன்று திங்கள்கிழமை காலை 9 மணிக்கு உண்ணாவிரதம் போராட்டத்தை தொடங்கி உள்ளனர்
Advertisement
புதுச்சேரியில் மாநில் காங்கிரஸ் தலைவரும் அமைச்ருமான நமச்சிவாயம் தலைமையில் சுதேசி பஞ்சாலை அருகே மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
உண்ணாவிரதப் போராட்டத்தில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள் ஷாஜகான், கந்தசாமி, துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, சட்டப்பேரவை உறுப்பினர்கள் லட்சுமிநாராயணன், அனந்தராமன், பாலன், தீப்பாய்ந்தான், விஜயவேணி, தனவேலு உள்பட தொண்டர்கள் உண்ணாவிரதத்தில் பங்கேற்றுள்ளனர்.