தற்போதைய செய்திகள்

காமன்வெல்த் போட்டியில் தொடரும் இந்திய வீரர்களின் தங்க வேட்டை..!

DIN

ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் 21-ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், பளுதூக்குதல் போட்டியில் இந்தியாவின் பதக்க வேட்டை தொடர்கிறது. போட்டியின் 4-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை மகளிருக்கான 69 கிலோ எடைப் பிரிவில் பூனம் யாதவ் தங்கம் வெல்ல, ஆடவர் பிரிவில் விகாஸ் தாக்குர் வெண்கலம் வென்றார்.

இந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியா பளுதூக்குதல் போட்டியின் மூலமாகவே அதிக தங்கம் வென்றுள்ளது. பூனம் யாதவ் வென்றதையும் சேர்த்து பளுதூக்குதலில் இந்தியா வென்ற தங்கத்தின் எண்ணிக்கை 5-ஆக உயர்ந்தது.

இந்நிலையில், 5-ஆம் நாளான இன்று திங்கள்கிழமை ஆண்களுக்கான 105 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் பிரதீப் சிங்(22) கலந்து கொண்டார். இவர் மொத்தம் 352 கிலோ (ஸ்நாட்ஸ் முறையில் 152 கிலோ மற்றும் கிளீன் & ஜெர்க் முறையில் 200 கிலோ) எடையை தூக்கி வெள்ளிப் பதக்கம் வென்றார்.

இப்போட்டியில் சமோவா நாட்டின் சனெலி மாவோ 360 கிலோ (ஸ்நாட்ஸ் முறையில் 154 கிலோ மற்றும் கிளீன் & ஜெர்க் முறையில் 206 கிலோ தூக்கி தங்கப் பதக்கம் வென்றார்.

இந்திய அணி ஒட்டுமொத்தமாக 13 பதக்கங்களை வென்றுள்ளது. அதில் பளுதூக்கலில் மட்டும் 5 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் என 9 பதக்கங்கள் வாங்கி குவித்துள்ளது.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த பிரதீப் சிங், காமன்வெல்த் இளைஞர், ஜூனியர் & சீனியர் பளுதூக்கும் சாம்பியன்ஷிப் ஆகிய போட்டிகளில் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது

துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம்: துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்றார் ஜித்துராய். ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் ஜித்துராய் தங்கம் வென்றார். மேலும் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஓம் மிதர்வால் வெண்கலம் வென்றார்.

இதையடுத்து இந்தியா 8 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலம் என 15 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் 3 இடத்தில் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT