தற்போதைய செய்திகள்

​உ.பி: 16 வயது சிறுமியை தீயிட்டுக்கொளுத்திய 3 பேர்: ஒருவர் கைது

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் பொதுக் குழாயில் தண்ணீர் பிடிக்கக் கூடாது எனக் கூறிய 5 பேர் சிறுமியை தீயிட்டுக் கொளுத்திய கொடூரம்

ANI

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் பொதுக் குழாயில் தண்ணீர் பிடிக்கக் கூடாது எனக் கூறிய 5 பேர் சிறுமியை தீயிட்டுக் கொளுத்திய கொடூரம் அரங்கேறியுள்ளது. இதனால் உத்தரப்பிரதேசத்தில் மீண்டும் பதற்றம் நிலவி வருகிறது. 

உத்தரபிரதேச மாநிலம், கான்பூரில் உள்ள ராஜ்பூர் அருகே வெய்னா என்ற கிராமத்தில் நேற்று சனிக்கிழமை மாலை 16 வயது சிறுமி ஒருவர் அப்பகுதியிலுள்ள பொதுக் குழாயில் தண்ணீர் பிடிக்கச் சென்போது அங்கு வந்த 3 பேர் தண்ணீர் பிடிக்கக் கூடாது எனக் கூறி சிறுமியை தாக்கியதுடன் அவரை தீயிட்டு கொளுத்தி உள்ளனர். 

இதையடுத்து அருகில் இருந்தவர்கள் ஒடி வந்து படுகாயமடைந்த சிறுமியை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுமி தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

சிறுமியை தாக்கி, தீயிட்டு கொளுத்திய விவகாரத்தில் ஒருவரை மட்டும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தலைமறைவாக உள்ளவர்களை தேடி வருவதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சிறுமியை தீயிட்டு கொளுத்திய சம்பவம் கான்பூர் பகுதியில் பொதுமக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முத்துக்கள் மலரும்... நிகிதா தத்தா!

பருவம்... மாளவிகா மேனன்!

கோல்டன்... திவ்ய பாரதி!

பஞ்சாப் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு அழுத சிறுவன்.. ராகுல் காந்தி அளித்த பரிசு!

விஜய்க்கு கொள்கை, கோட்பாடு இல்லை; எனக்கும்தான் கூட்டம் வந்தது! - சரத்குமார்

SCROLL FOR NEXT