தற்போதைய செய்திகள்

வருமான வரித்துறை பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்து ரூ.2 கோடி தங்கம் கொள்ளை

DIN

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தின் வருமான வரித்துறை துணை இயக்குநர் (விசாரணை) அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த ரூ.2 கோடி மதிப்புள்ள தங்கத்தை கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளனர். 

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் உள்ள வருவாய்த்துறை அலுவலக கட்டடத்தின் இரண்டாவது மாடியில் செயல்பட்டு வருகிறது வருமான வரித்துறை துணை இயக்குநர் அலுவலகம் (விசாரணை) உள்ளது.

இந்த அலுவலகத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற வருமான வரி சோதனையின்போது பிடிபட்ட தங்கம் இந்த அலுவலகத்தில் உள்ள அலமாரியின் உள்ளே பாதுகாப்பு பெட்டகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நேற்று சனிக்கிழமை (ஏப் 21) இந்த அலுவலகத்துக்குள் நுழைந்த திருடர்கள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களை (சிசிடிவி) அடித்து உடைத்துவிட்டு, அலமாரியை உடைத்து உள்ளே இருந்த பாதுகாப்பு பெட்டக சாவியை எடுத்தனர். பாதுகாப்பு பெட்டகத்தின் இரண்டு பெட்டிகளின் சீல்களை உடைத்துவிட்டு உள்ளே இருந்த சுமார் ரூ.2 கோடியே 25 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை திருடர்கள் எடுத்துச் சென்றுள்ளனர். 

ஏப்ரல் 18 மற்றும் 21க்கு இடையே பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனையின்போது பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தை திருடர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது

இதுதொடர்பாக, அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், கொள்ளையர்களை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை பவுனுக்கு ரூ.640 உயா்வு

மகளிா் டி20: வங்கதேசத்துடனான தொடரை வென்றது இந்திய அணி

சங்கரன்கோவில் கல்வி மாவட்டம் உருவாக்க வலியுறுத்தல்

டாஸ்மாக் ஊழியரிடம் வழிப்பறி செய்ய முயன்ற இருவா் கைது

ஆறுமுகனேரியில் அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல்

SCROLL FOR NEXT