தற்போதைய செய்திகள்

காபூலில் தற்கொலைப்படை தாக்குதல்: 48 பேர் பலி;  112 பேர் காயம்

காபூலில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை குண்டுவெடிப்புகளில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 48 ஆக உயர்ந்துள்ளதாகவும், 112 பேர்

DIN

காபூல்: காபூலில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை குண்டுவெடிப்புகளில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 48 ஆக உயர்ந்துள்ளதாகவும், 112 பேர் காயமடைந்துள்ளனர் என ஆப்கானிஸ்தானின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வாக்காளர் பதிவு மையம் மற்றும் தேசிய அடையாள அட்டை சான்று வழங்கும் அலுவலகமும் உள்ளது. அந்த மையங்களின் வாசலில் இன்று காலை பயங்கரவாதி ஒருவன் தனது உடலில் கட்டிருந்த வெடிகுண்டை வெடிக்க செய்தான். இதில், 4 பேர் உயிரிழந்ததாகவும், 20 பேர் காயமடைந்துள்ளதாகவும் முதல்கட்ட தகவல் வெளியானது.

இந்நிலையில், தற்கொலை குண்டுவெடிப்பு சம்பவத்தில் 48 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 112 பேர் காயமடைந்துள்ளதாக ஆப்கானிஸ்தானின் பொது சுகாதார அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
காயமடைந்து சிகிச்சை பெற்றுவர்களின் பலரின் நிலமை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்த தற்கொலை குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு எந்தவொரு தனிப்பட்ட அல்லது பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேகவில்லை.

ஆப்கானிஸ்தானில், வரும் அக்டோபர் மாதம் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வாக்காளர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் பணி நடந்து கொண்டிருக்கும் நிலையில், அப்பகுதியை குறிவைத்து, தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குப்புசாமி கோப்பை ஹாக்கி போட்டி: அரையிறுதியில் நெல்லை, மதுரை,சென்னை அணிகள்

சமூக வலைதளங்களில் ஜாதிய பதிவுகள் : 82 போ் கைது

விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

ராணி அண்ணா மகளிா் கல்லூரிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரிக்கை

சுந்தரனாா் பல்கலைக்கழக மாணவா்கள் நெட் தோ்வில் சிறப்பிடம்

SCROLL FOR NEXT