தற்போதைய செய்திகள்

​கனடாவில் பொதுமக்கள் மீது வேனை மோதவிட்டு தாக்குதல்: 10 பேர் பலி; 15 பேர் காயம்

DIN

டொரண்டோ: கனடாவில் பொதுமக்கள் மீது வேனை மோதவிட்டு நடத்தப்பட்ட தாக்குதலில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

டொரண்டோ நகரில் உள்ளுர் நேரப்படி நேற்று மதியம் 1.30 மணியளவில் ஃபின்ஞ் அவன்யூ பகுதியில் மக்கள் வழக்கம் போல் பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தனர். அப்போது வேகமாக வந்துகொண்டிருந்த வெள்ளை நிற வாடகை வேன் ஒன்று மக்கள் கூட்டத்திற்குள் திடீரென புகுந்து அங்கிருந்தவர்கள் மீது மோதியது. 

இதில், 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 16 பேர் காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இந்த சம்பவம் விபத்து ஏற்படுத்தும் நோக்கத்தில் நடைபெறவில்லை. ஆனால் பயங்கரவாத செயலாகவும் தோன்றவில்லை என்றும் இது குறித்த விசாரணை மிகவும் சிக்கலானதாக இருக்கும் என்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

மேலும் தப்பி ஓடிய விபத்திற்கு காரணமான டொரண்டோவில் புறநகர் பகுதியான ரிச்மாண்ட் ஹில்லில் வசிக்கும் அலெக்ஸ் மினாசியன்(25) என்ற ஓட்டுநரை போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஓட்டுநருக்கு ஏதேனும் பயங்கரவாத கும்பலுடன் தொடர்புள்ளதா என தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. விரைவில் உறுதியான அறிக்கையை வெளியிடுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வர் பயணம்: கொடைக்கானலில் 6 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

SCROLL FOR NEXT