முகப்பு
தற்போதைய செய்திகள்

காவிரி விவகாரம்: முதல்வர் பழனிசாமி இன்று மாலை ஆளுநருடன் சந்திப்பு

ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை இன்று மாலை 5 மணியளவில் சந்தித்து பேசுகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:53 PM
பகிர்:

சென்னை:  பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க நேரம் கேட்டும் பதில்வராத நிலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை இன்று மாலை 5 மணியளவில் சந்தித்து பேசுகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

காவிரி விவகாரம் குறித்து பிரதமரை சந்திக்க நேரம் கேட்டு பதில் வராத நிலையில் முதல்வர் பழனிசாமி ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். சந்திப்பின்போது காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக பிரதமரிடம் வலியுறுத்தக் கோரிக்கை வைப்பார் என தெரிகிறது. 

காவிரி விவகாரம் குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மே 3-ஆம் தேதி தீர்ப்பு வரும் நிலையில் ஆளுநர் - முதல்வர் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

முழு கட்டுரையைப் படிக்க →