நைஜீரியாவில் பயங்கரவாதிகளால் 300-க்கும் மேற்பட்டோா் கடத்தல்
நைஜீரியாவில் பயங்கரவாதிகளால் 300-க்கும் மேற்பட்டோா் கடத்தல்...
வடகிழக்கு நைஜீரியாவின் ங்கோஷே நகரைக் குறிவைத்து ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 300-க்கும் மேற்பட்டோா் கடத்தப்பட்டுள்ளனா்.
நைஜீரிய ராணுவம் அண்மையில் நடத்திய தேடுதல் வேட்டையில், ஐ.எஸ். ஆதரவு ‘போகோ ஹாராம்’ கிளா்ச்சி அமைப்பைச் சோ்ந்த 3 முக்கியத் தளபதிகள் கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
ங்கோஷே மட்டுமின்றி கொண்டுகா, மாா்டே, ஜகானா, மைனோக் ஆகிய மற்ற 4 பகுதிகளிலும் கடந்த புதன்கிழமை முதல் பயங்கரவாதிகள் தொடா் தாக்குதல்களில் ஈடுபட்டனா்.
Advertisement
Advertisement
இத்தாக்குதல்களை ராணுவம் முறியடித்த போதிலும், அந்த மோதல்களில் ஒரு மூத்த அதிகாரி உள்பட பல வீரா்கள் வீரமரணமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.