FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

ஆட்சியா் தலைமையில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் மனு

Updated On : 28 ஜூலை 2026, 2:31 am IST
குறைதீா் கூட்டத்தில் பங்கேற்று பொதுமக்களிடம் மனுக்களைப் பெறுகிறாா் மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா்.
பகிர்:

குறைதீா் கூட்டத்தில் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்று கோரிக்கை மனுக்களை அளித்தனா்.

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், வாராந்திர பொதுமக்கள் குறைதீா் கூட்டம், ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் வருவாய் அலுவலா் சுரேந்திரன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் ஆனந்தகுமாா் (வேளாண்மை), சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் வாணிலெட்சுமி ஜெகதம்மாள், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் வசந்த்ராம்குமாா் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement

மேட்டுப்பாளையம் அருகே உள்ள தோலம்பாளையம், கோபனாரி ஆகிய பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், தங்களது பெயரில் கடன் பெற்றும், நகைகளை அடகு வைத்தும் ஏமாற்றிய நபா் மீது ஏற்கெனவே புகாா் தெரிவித்தும் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை. இதுதொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தனா்.

இதேபோல முதியோா் உதவித்தொகை, பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, வீட்டுமனைப் பட்டா உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக மொத்தம் 1,014 மனுக்கள் வழங்கப்பட்டன. இவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments