சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் மே 7-ம் தேதி நளினி சிதம்பரம் ஆஜராக வேண்டும்: அமலாக்கத்துறை புதிதாக சம்மன்
மேற்கு வங்க மாநிலத்தில் சாரதா நிதி நிறுவன மோசடி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிறுவனத்திடம் முன்னாள்
புதுதில்லி: மேற்கு வங்க மாநிலத்தில் சாரதா நிதி நிறுவன மோசடி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிறுவனத்திடம் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவியும் மூத்த வழக்குரைஞருமான நளினி சிதம்பரம் வழக்குரைஞர் கட்டணமாக ரூ. 1 கோடியைப் பெற்றது தொடர்பாக அமலாக்கத் துறையினர் விசாரணை செய்ய முடிவு செய்தனர்.
இந்த விசாரணைக்கு ஆஜராக நளினி சிதம்பரத்துக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது. இந்த சம்மனை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி சிதம்பரம் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இந்த வழக்கில் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை சம்மன் மீதான மேல் நடவடிக்கைகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டார். இந்த தடையை நீக்க கோரி அமலாக்கத் துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டை விசாரித்த உயர்நீதிமன்றம் தீர்ப்புக்காக ஒத்திவைத்திருந்தது.
இந்நிலையில், மே 7-ம் தேதி நளினி சிதம்பரம் ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை புதிதாக சம்மன் அனுப்பியுள்ளது.