தற்போதைய செய்திகள்

கேரள வெள்ள பாதிப்புக்கு ரூ.10 கோடி உதவி: கர்நாடக முதல்வர் குமாரசாமி

மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்துக்கு ரூ.10 கோடி நிவாரண நிதி வழங்கப்படும் என்று கர்நாடக முதல்வர் எச்.டி. குமாரசாமி

ANI

பெங்களூரு: மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்துக்கு ரூ.10 கோடி நிவாரண நிதி வழங்கப்படும் என்று கர்நாடக முதல்வர் எச்.டி. குமாரசாமி அறிவித்துள்ளார்.

கேரள மாநிலத்தில் கடந்த இரண்டு நாட்களாக கன மழை மற்றும் வரலாறு காணாத வெள்ளம், நிலச்சரிவால் கேரளத்தின் சில மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 28 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதுடன், சொத்துகளுக்கு மிகப்பெரிய அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளன. இதனால், கேரள மக்கள் சொல்லொணாத் துயரத்தை அடைந்து வருகின்றனர். மழை-வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட பகுதிகளை மறுகட்டுமானம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ராணுவ உதவி தேவை என்று மத்திய அரசிடம் கேரள முதல்வர் பினராயி விஜயன் கோரிக்கைவைத்துள்ளார். 

இந்நிலையில், கர்நாடக முதல்வர் குமாரசாமி, கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு மாநிலத்தில் வெள்ள பாதிப்புகள் குறித்தும், மீட்பு நிலவரங்கள் குறித்தும் கேட்டறிந்தார். 

இதையடுத்து கடுமையான மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு கர்நாடக அரசின் சார்பிலும், கர்நாடக மக்களின் சார்பிலும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உடனடியாக மீட்பு, நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகளுக்காக கடுமையான முயற்சிகளை மேற்கொண்டுள்ள கேரள மாநில அரசுக்கும், மாநில மக்களுக்கும் கர்நாடக அரசு மற்றும் மக்களின் ஆதரவையும், உணர்வுகளையும் காட்டுவதன் உதவியாக முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து கேரளத்துக்கு உடனடியாக ரூ.10 கோடியை விடுவிக்கும்படி உத்தரவிட்டுள்ளேன். 

மேலும், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான நிவாரண பொருட்கள் மற்றும் ஒரு மருத்துவர்கள் குழுவை அனுப்ப முதல்வரின் செயலாளர் டி.எம்.விஜயபாஸ்கர் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

முன்னதாக, கேரள முதல்வர் பினராயி விஜயனுடன், பிரதமர் மோடி தொலைபேசியில் பேசி வேண்டிய உதவிகள் செய்வதாக கூறியுள்ளார். நிலைமையை கண்காணிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பனிமய மாதா போராலய திருவிழா: தூத்துக்குடியில் மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை

லாரி மோதி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

மாவட்ட ஹாக்கி போட்டி: கோவில்பட்டி வ.உ.சி. பள்ளி முதலிடம்

மத்திய அமைச்சா் நிதின் கட்கரி இல்லத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபா் கைது

தூத்துக்குடி விமான நிலையத்தில் போக்குவரத்து சேவை தொடக்கம்

SCROLL FOR NEXT