தற்போதைய செய்திகள்

இந்திய ராணுவத்துக்கு ரூ.46,000 கோடிக்கு ஆயுதம், ஹெலிகாப்ட்டர் வாங்க மத்திய அரசு ஒப்புதல்

DIN


புதுதில்லி: இந்திய ராணுவத்துக்கு ரூ.46 ஆயிரம் கோடிக்கு தளவாடங்கள், ரூ.21 ஆயிரம் கோடிக்கு 111 ஹெலிகாப்ட்டர்களை வாங்க மத்திய பாதுகாப்பு துறையின் கொள்முதல் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

ஆயுதங்களை கொள்முதல் செய்யும் குழுவின் கூட்டம் பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று தில்லியில் நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில், இந்திய ராணுவத்துக்கு ரூ.46 ஆயிரம் கோடி மதிப்பிலான தளவாடங்களை கொள்முதல் செய்யும் திட்டத்துக்கும், இந்திய கடற்படைக்கு பாதுகாப்பு பணிகளுக்காக ரூ. 21 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் 111 ஹெலிகாப்டர்களை வாங்கவும், ரூ.3,364 கோடியில் ராணுவத்துக்கு தேவையான பீரங்கிகள் வாங்கவும், சுமார் ரூ.24,879 கோடி மதிப்பிலான சில கொள்முதல் திட்டங்களுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதாக மூத்த அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் திருநாவுக்கரசு நாயனாா் குருபூஜை

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

SCROLL FOR NEXT