தற்போதைய செய்திகள்

ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து எதிரான வழக்கு: அடுத்த ஆண்டு ஜனவரிக்கு ஒத்தி வைப்பு

ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து எதிரான வழக்கு விசாரணையை அடுத்த ஆண்டு ஜனவரி 19-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது 

ANI

புதுதில்லி: ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து எதிரான வழக்கு விசாரணையை அடுத்த ஆண்டு ஜனவரி 19-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.  

அரசியலமைப்புச் சட்டத்தில் குடியரசுத் தலைவரின் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் நிரந்தர குடிமக்களுக்கு சிறப்புரிமைகளை வழங்க வகைசெய்யும் அரசியலமைப்புச் சட்டத்தின் 35-ஏ சட்டப்பிரிவை எதிர்த்து தில்லியை சேர்ந்த 'வீ சிட்டிசன்' என்ற அரசுசாரா அமைப்பு, உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சட்டப்பிரிவு 35-ஏ மற்றும் 370இன் கீழ், சுயாட்சி அதிகாரம் வழங்கப்பட்டிருப்பது, நாட்டின் மற்ற பகுதிகளுக்கு பாகுபாடு காட்டுவதாக இருப்பதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
சிறப்புரிமைகளை வழங்க வகைசெய்யும் அரசியலமைப்புச் சட்டத்தின் 35-ஏ சட்டப்பிரிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதால் அந்த மாநிலத்தில் கொந்தளிப்பான சூழ்நிலையே ஏற்பட்டுள்ளது. பிரிவினைவாதிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு சலுகைகள் வழங்கும் சட்டப்பிரிவை நீக்கக் கோரி பாஜக தலைவர் அஷ்வின் உபாத்யாய் உச்ச நீதிமன்றத்தில் புதிதாக ஒரு மனு தாக்கல் செய்தார். இன்று வழக்கு விசாரணை தொடங்கியதும், வழக்கு விசாரணையை டிசம்பர் மாதம் நடைபெறவிருக்கும் மாநில உள்ளாட்சி தேர்தலுக்கு பின்னரே விசாரிக்க வேண்டும் என மத்திய மற்றும் மாநில அரசு நிர்வாகம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணையை அடுத்த ஆண்டு ஜனவரி 19-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமித் ஷா-வை சந்திக்கக் காரணம்…: EPS விளக்கம்! | செய்திகள்: சில வரிகளில் | 17.09.25

ஜெர்மனியில் செந்தேன்... சிவாங்கி!

நட்புக்குள்ளே.... சத்யா தேவராஜன்!

பிரதமர் மோடிக்கு பிரிட்டன் மன்னர் அளித்த பிறந்தநாள் பரிசு! என்ன தெரியுமா?

விலை குறையும் ஸ்விஃப்ட், டிசையர், பலேனோ, ஃபிராங்க்ஸ், பிரெஸ்ஸா வாகனங்கள்!

SCROLL FOR NEXT