முகப்பு
தற்போதைய செய்திகள்

சட்டப் பேரவை  உறுப்பினர்களுக்கான ஊதிய உயர்வு மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல்

சட்டப் பேரவை  உறுப்பினர்களுக்கான ஊதிய உயர்வு மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளித்துள்ளார். 

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:10 PM
பகிர்:

சென்னை:  சட்டப் பேரவை  உறுப்பினர்களுக்கான ஊதிய உயர்வு மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளித்துள்ளார். 

சமீபத்தில் தமிழக எம்.எல்.ஏ.க்களின் சம்பளம் ரூ.55 ஆயிரத்தில் இருந்து ரூ.1.05 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் முதல்வர் பழனிச்சாமி இதற்கான அறிவிப்பினை வெளியிட்டார்.

பயணப்படி உள்ளிட்ட இதர படிகள் உயர்த்தப்பட்டுள்ளதால் அவர்களின் சம்பளம் இருமடங்காக உயர்ந்துள்ளது. 

இந்த சம்பள உயர்வானது ஜூலை 1-ம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வு மசோதாவுக்கு  ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளித்துள்ளார்.

மார்ச் 1ம் தேதி முதல் நிலுவைத் தொகை மற்றும் ஊதிய உயர்வுடன் எம்எல்ஏக்களுக்கு சம்பளம் வழங்கப்பட உள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →