தற்போதைய செய்திகள்

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கு: நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ளதாக உச்சநீதிமன்றம் அறிவிப்பு

DIN

புதுதில்லி:  காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக கடந்த 2007ம் ஆண்டு நடுவர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், தமிழகத்திற்கு 192 டிஎம்சி நீர் வழங்க உத்தரவிடப்பட்டது. 

உச்சநீதிமன்றத்தை நாடிய தமிழகம், மேலும் 72 டி.எம்.சி. நீரை பெற்றுதர கோரியது. ஆனால் 192 டிஎம்சி நீரையே அளிக்க முடியாது என கர்நாடகா தெரிவித்தது. இது தொடர்பான வழக்கை  தீபக் மிஸ்ரா தலைமையில் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், நாளை தீர்ப்பு வெளியாகிறது.

காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் வழக்கு தொடர்ந்தது.  உச்ச நீதிமன்றத்தில் காவிரி வழக்கு 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

SCROLL FOR NEXT