தற்போதைய செய்திகள்

கலாம் இல்லத்தில் இருந்து அரசியல் பயணத்தை தொடங்கினார் கமல்ஹாசன்

DIN

ராமேசுவரம்: முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் வீட்டில் இருந்து இன்று தனது அரசியல் பயணத்தை தொடங்கினார் கமல்ஹாசன்.

ராமேசுவரத்தில் உள்ள முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாமின் இல்லத்துக்கு இன்று புதன்கிழமை காலை 7.45 மணியளவில் கமல்ஹாசன் சென்றார். கமல்ஹாசனை அப்துல் கலாமின் பேரன் சலீம் நடிகர் வரவேற்று இல்லத்திற்குள் அழைத்துச் சென்றார். அங்கு அப்துல் கலாமின் சகோதரர் முத்துமீரான் மரைக்காயரிடம் கமல்ஹாசன் ஆசி பெற்றார். கலாமின் குடும்பத்தினரிடம் சிறிது நேரம் பேசினார். 

கலாம் படித்த பள்ளிக்குச் செல்லும் திட்டம் ரத்து செய்யப்படுவதாக திடீரென அறிவிக்கப்பட்டது. கலாம் இல்லத்தில் இருந்து அரசியல் பயணத்தை தொடங்கிய கமல்ஹாசன் இன்னும் சற்று நேரத்தில் கணேஷ் மஹாலில் மீனவர்களை சந்தித்து பேசுகிறார். 

அதைத்தொடர்ந்து, கலாம் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை வழியாக மதுரையில் நடைபெறும் பொதுக்கூட்டத்துக்கு வருகிறார். வழியில் 3 இடங்களிலும் அவரது இயக்கத்தினர் வரவேற்பு அளிக்கின்றனர். அங்கு கூட்டத்திலும் கமல்ஹாசன் பேசுகிறார்.

கலாமின் பேரன் சலீம் அப்துல் கலாம் படம் பொறித்த நினைவு பரிசை கமலுக்கு வழங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: பிளஸ் 2 பொதுத் தேர்வில் 96.10% தேர்ச்சி

ஒடிஸாவில் பாஜக முதல்வர் ஜூன் 10-ல் பதவியேற்பார்: மோடி

வைரலாகும் தக் லைஃப்!

பிளஸ்2 பொதுத்தேர்வு: திருவள்ளூர் மாவட்டத்தில் 23,401 பேர் தேர்ச்சி

பிளஸ் 2 பொதுத் தேர்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 93.17% தேர்ச்சி

SCROLL FOR NEXT