தற்போதைய செய்திகள்

நான் உங்கள் தலைவன் அல்ல தொண்டன்: கமல்ஹாசன்

DIN

நடிகர் கமல்ஹாசன் இன்று நேரடி அரசியல் பயணத்தை தொடங்கினார். அப்துல்கலாம் இல்லத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். 

இந்நிலையில் மதுரை ஒத்தக்கடையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தனது கட்சியின் கொடியை ஏற்றி  வைத்தார். மக்கள் நீதி மய்யம் என்ற தனது கட்சியின் பெயரை அறிவித்தார். பொதுக்கூட்டத்தில்  பேசிய கமல்ஹாசன் இங்கு எங்கள் தண்டவாளமும் உங்கள் வண்டவாளமும் வெளிவரும் நாள் இன்று. 
கடந்த காலங்களில் எங்கள் நற்பணி இயக்க பணிகளுக்கு தடை வந்தது. 

கடந்தவை கடந்தவையாக இருக்கட்டும், ஆனால் மறந்தவையாக இருக்காது. எங்கள் நற்பணிகளுக்கு இடைஞ்சலாக சில அரசுகள் இருந்தன அதனை மறக்க மாட்டோம். 37 ஆண்டுகளாக அமைதியாக நற்பணி செய்த கூட்டத்தை நீங்கள் பார்த்தீர்கள். நான் உங்கள் தலைவன் அல்ல தொண்டன். அநீதிகளை கண்டு காத்திருக்க முடியாமல் களம் இறங்கியுள்ளோம். புதிய தென் இந்தியாவின் வரைபடம் எங்கள் கட்சி கொடியில் தெரியும் எங்கள் கட்சி கொடி 6 மாநிலங்களை குறிக்கிறது. 

ஊழல் வேண்டுமென்றால் திமுக, அதிமுகவை ஆதரியுங்கள். நல்ல கட்சிக்கு வாக்களித்தீர்கள் என்றால் ஆண்டுக்கு ரூ.6000 இல்லை ரூ.6 லட்சம் கிடைத்திருக்கும். ஓட்டின் மதிப்பு தெரியாமல் அடிமாட்டு விலைக்கு விற்றுவிட்டீர்கள். சாதி, மதம் அறவே நீக்கப்பட வேண்டும்; ஊழலை குறைத்தால் மின்சாரம் வரும்.  எல்லா தரப்பினருக்கும் தரமான கல்வி போய்ச் சேர வேண்டும். 

உங்கள் எல்லாப் பற்றாக்குறையும் பேராசையால் வந்தது. காவிரி விவகாரத்தில் அனைத்து கட்சிகளும் தூண்டி விடும் வேலையை செய்தனர். முறையாக பேச்சுவார்த்தை நடத்தினால் எந்த மாநிலத்திலிருந்தும் தண்ணீர் மட்டுமல்ல, ரத்த தானம் கூட கிடைக்கும். நாங்கள் விஞ்ஞானிகளாக வரவில்லை, சமூக சேவகர்களாக வந்துள்ளோம் செய்ய வேண்டியதை செய்தாலே போதுமானது. நாங்கள் தத்தெடுக்கும் 8 கிராமங்களை முன்னேற்றி முன்னுதாரணமாக காட்டுகிறோம்

இடது, வலது என்று யோசிக்காமல் மக்களின் நலனை கருத்தில் கொண்டு புறப்பட்டு இருக்கிறோம். லட்சம் தோழர்களின் ஒரு பகுதிதான் மதுரை கூட்டம்.  நியாயப் போரின் தமிழர் படை இது. நான் யாரென்று புரிந்து கொண்டதால் உங்களுடன் இணைகிறேன். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் காங்கிரஸ் நிரவாகிகள் குடியரசு தலைவருக்கு மனு

மதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

25 அரசுப் பள்ளிகள் நூறு சதவீதம் தோ்ச்சி

தேரோடும் வீதியில் புதைவிட மின்கம்பி அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

வா்ணம் பூசும் தொழிலாளி கீழே தவறி விழுந்து பலி

SCROLL FOR NEXT