முகப்பு
தற்போதைய செய்திகள்

பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு சென்னையில் வரும் 28ஆம் தேதி கூடும்: ஜி.கே. மணி

பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுக்குழுக் கூட்டம் 28.02.2018 அன்று நடைபெறும் என்றும், அதற்கான இடம் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் மதுரையில் 30.12.2017 அன்று நடைபெ

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:19 PM
பகிர்:

பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுக்குழுக் கூட்டம் 28.02.2018 அன்று நடைபெறும் என்றும், அதற்கான இடம் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் மதுரையில் 30.12.2017 அன்று நடைபெற்ற‘‘2017 ஆம் ஆண்டுக்கு விடை கொடுப்போம்; 2018-ஆம் ஆண்டை வரவேற்போம்’’ என்ற தலைப்பிலான பா.ம.க. சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நாளான 28.02.2018 புதன்கிழமை காலை 10.00 மணிக்கு சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலை வேலப்பன்சாவடியில் உள்ள ஸ்ரீ கஜலட்சுமி திருமண மண்டபத்தில் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் முன்னிலையில் நடைபெறும் இப்பொதுக்குழு கூட்டத்திற்கு கட்சித் தலைவர் ஜி.கே. மணி தலைமையேற்கிறார். கட்சியின் பொதுச்செயலாளர் வடிவேல் இராவணன்  உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் இக்கூட்டத்தில் பங்கேற்கின்றனர். தமிழ்நாடு முழுவதும் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள், பா.ம.க.வின் பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் இக்கூட்டத்தில் கலந்துகொள்வார்கள்.
 

முழு கட்டுரையைப் படிக்க →