வாஷிங்டன்: அமெரிக்க வர்ஜினியா ராணுவ தளத்திற்கு வந்த மர்ம பொருள் அடங்கிய கடிதம் ஒன்றை பிரித்ததில் 11 பேருக்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் வர்ஜினியாவின் ஆர்லிங்டன் நகரில் உள்ள ராணுவ தள அலுவலகத்திற்கு அஞ்சல் உறையுடன் நேற்று செவ்வாய்கிழமை வந்த பொருள்கள் அடங்கிய கடிதத்தை வாங்கி பிரிந்தனர். அப்போது அதில் இருந்து வெளியான மோசமான ஒரு சுவை உணர்வு ஏற்பட்டுள்ளது. இதில் 3 பேரின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதையடுத்து தடுப்பு நடவடிக்கையாக அலுவலக கட்டடத்தில் இருந்த அனைவரும் உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். இதில் மேலும் 11 பேருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து கடற்படை குற்றவியல் புலனாய்வு பிரிவினர் மற்றும் பெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் ஒரு கூட்டு விசாரணையை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 3 பேரின் நிலைமை சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.