தற்போதைய செய்திகள்

முத்தூரில் பெட்ரோல் பங்க் ஊழியர் மர்மச் சாவு

வெள்ளக்கோவில் அடுத்த முத்தூரில் இன்று பெட்ரோல் பங்க் ஊழியர் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

ஆா்.ராதாகிருஷ்ணணன்

வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவில் அடுத்த முத்தூரில் இன்று பெட்ரோல் பங்க் ஊழியர் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

முத்தூர் தொட்டியபாளையத்தைச் சேர்ந்தவர் சசிக்குமார் (23). தாய், தந்தை இல்லாத இவர் தனது தாத்தா வீட்டில் தங்கியிருந்தார். முத்தூர் கடைவீதியில் காங்கயம் சாலையிலுள்ள முத்துக்குமார் என்பவருடைய பெட்ரோல் பங்கில் வேலை செய்து வந்தார்.

பணத்தைக் கையாடல் செய்து விட்டதாகக் கூறி வேலையிலிருந்து நிறுத்தப்பட்டதாகத் தெரிகிறது. பின்னர் பணத்தைக் கேட்டு பங்க் முதலாளி சசிக்குமாரை மிரட்டித் தாக்கினாராம். இந்நிலையில் சசி தனது தாத்தா வீட்டில் தூக்குப் போட்டு இறந்து கிடந்தார். 

சசியை அடித்துக் கொன்று விட்டதாக, சடலத்தை எடுக்க விடாமல் உறவினர்கள் தகராறு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காங்கயம் டிஎஸ்பி கிருஷ்ணசாமி, தாசில்தார் மாணிக்கவேல் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

உரிய விசாரணை நடத்தி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்ததைத் தொடர்ந்து, உடல் பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

வெள்ளக்கோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”5 தொகுதிகளைக் கேட்டுள்ளோம்!” காதர் மொகிதீன் தகவல்! | DMK

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

SCROLL FOR NEXT