தற்போதைய செய்திகள்

விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்சேவுக்கு குடியுரிமை வழங்கியது ஈக்குவடார்

DIN

லண்டன்: விக்கிலீக்ஸ் இணையதளத்தின் உரிமையாளர் ஜூலியன் அசாஞ்சேவுக்கு ஈக்குவடார் நாடு குடியுரிமை வழங்கி உள்ளது.

இதையடுத்து தான் ஈக்குவடார் நாட்டின் குடிமகன் என்பதைக் குறிக்கும் வகையில் அந்நாட்டு சின்னம் பொறித்த டி சர்ட் அணிந்த படத்தை அசாஞ்சே வெளியிட்டுள்ளார்.

விக்கிலீக்ஸ் நிறுவனரான ஜூலியன் அசாஞ்சே ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்தவர். 2010-ஆம் ஆண்டு அமெரிக்க ராணுவத்தின் ரகசியக் கோப்புகளை விக்கிலீக்ஸ் வலைதளத்தில் கசியவிட்டு அமெரிக்காவை நெருக்கடியில் ஆழ்த்தியும், உலகயளவில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சையும் ஏற்படுத்தினார். அவரைக் கைது செய்ய அமெரிக்கா தீவிர நடவடிக்கை மேற்கொண்டது. அதிலிருந்து தப்பிக்க, லண்டனில் உள்ள ஈக்வடார் நாட்டுத் தூதரகத்தில் அவர் தற்போது தஞ்சமடைந்துள்ளார்

2012-இல் ஸ்வீடன் நாட்டில் இரு பெண்களை பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த விவகாரத்தில் அசாஞ்சே கைதாகும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து லண்டனில் உள்ள ஈக்குவடார் நாட்டு தூதரகத்தில் அசாஞ்சே தஞ்சமடைந்தார். 

2012 முதல் கிட்டத்தட்ட 5 ஆண்டுகளாக ஈக்குவடார் தூதரகத்தில் தஞ்சமடைந்த அசாஞ்சேவுக்கு நிரந்தர குடியுரிமையை ஈக்குவடார் நாடு வழங்கி அனுமதி அளித்துள்ளது. இது தொடர்பான உத்தரவை ஈகுவடார் வெளியுறவுத்துறை அமைச்சர் மரியா ஃபெர்னாண்டா எஸ்பினோசா பிறப்பித்தார். இதையடுத்து தூதரகத்தில் உள்ள அசாஞ்சே விரைவில் ஈக்குவடார் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்சே, அமெரிக்காவைப் பற்றியோ, அதன் கொள்கைகள் குறித்தோ ஏதும் அறியாதவர். அவரது நடவடிக்கைகள் அனைத்தும் அமெரிக்காவின் எதிரான நாடுகளுக்கு ஆதரவாகவே உள்ளன. பயங்கரவாதிகளின் அன்புக்குரியவராகவே செயல்படுகிறார் என்று அமெரிக்காவின் மத்திய உளவு அமைப்பின் (சி.ஐ.ஏ.) தலைவர் மைக் பொம்பியோ தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் மழை!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு நாள்: தலைவர்கள் மரியாதை!

திருப்பம் தரும் தினப்பலன்

தினம் தினம் திருநாளே!

சிலந்தி ஆற்றில் கேரளம் தடுப்பணை: தலைவா்கள் கண்டனம்

SCROLL FOR NEXT