தற்போதைய செய்திகள்

ஏவுகணை தாக்குதல் நடக்கப்போவதாக பரவிய தகவலால் பீதியில் உறைந்தனர் ஹவாய் தீவு மக்கள்

DIN

ஹவாய் தீவில் ஏவுகணை தாக்குதல் நடக்கப்போவதாக எஸ்எம்எஸ் மூலம் பரவிய வதந்தியால் அந்நாட்டு மக்கள் பீதிக்கு உள்ளாயினர்.

அமெரிக்காவின் ஹவாய் தீவில் சனிக்கிழமை காலை பரவிய எஸ்எம்எஸ் ஒன்று அனைவரையும் பீதிக்கு உள்ளாக்கியது. "பேரழிவை ஏற்படுத்தும் ஏவுகணை தாக்குதல் ஹவாய் தீவில் நடக்கப்போகிறது. அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லவும்." என்று அந்த எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இதைப் படித்த மக்கள் அனைவரும் பீதியாக சமூக வலைத்தளங்கள் மூலம் தகவலைப் பகிர்ந்துகொண்டனர். ஆனால், அடுத்த பத்து நிமிடங்களிலேயே இது வெறும் வதந்தி என்றும் யாரும் இதை நம்பி, பகிர வேண்டாம் மற்றொரு தகவல் வந்தது.

இது குறித்து கருத்து தெரிவித்த ஹவாய் மாகாண ஆளுநர் டேவிட், “பேரிடர் மேலாண்மை அமைப்பின் ஊழியர்கள் தவறான பட்டன் அழுத்தப்பட்டதால் தவறான செய்தி பரவிவிட்டது என்றும் இதற்காக மக்களிடம் மன்னிப்பு கேட்பதாகவும் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

இருதரப்பினரிடையே கடும் மோதல்: கடைகளுக்கு தீ வைப்பு - போலீஸார் குவிப்பு!

ஹர ஹர வீரமல்லு படத்தின் டீசர்

டீப் ஃபேக் தொழில்நுட்பம்.. வரைமுறைகள் நிர்னயிக்க நீதிமன்றம் உத்தரவு!

இஸ்ரேலில் வேலை, ரூ.6 லட்சம் பண மோசடி: ஏமாற்றிய நபர் சிக்கியது எப்படி?

SCROLL FOR NEXT